ஜெட்டா, அக். 8- சவுதி அரேபி யாவில் இயங்கும் சவுதி பிரிட் டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி 17.2 பில்லியன் அமெ ரிக்க டாலர் (12,560 கோடி) மதிப்புடன் நாட்டின் மிகப் பெரிய 3-ஆவது வங்கியாக உருவெடுத்துள்ளது.
இந்த புதிய வங்கியின் தலைவராக சவுதி அரேபியா வின் பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக பழைமை வாதத்தை காலம் காலமாக கடை பிடித்து வரும் சவுதி அரேபியாவில் முதல் முறை யாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவை நவீன மயமாக்கும் முயற்சியில் பட் டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி விஷன் 2030 என்ற திட் டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட் டது.
புதிய வங்கியின் தலைவ ராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அல் ஓலயன் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆ-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருந்தார்.
தங்களது குடும்பத்தினர் நடத்திவரும் தொழில் குழுமத் துக்கு தலைமை வகித்து வருகிறார். சவுதி அரேபியாவின் நிதி துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னு தாரணமாக விளங்குகிறார்.
- விடுதலை நாளேடு, 8.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக