♦ தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண்:1091. திடீர் ஆபத்துகள் வரும் பொழுது பெண்கள் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். எங்கே ஓர் இடத்தில் தனித்து விடப்பட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். 1091 என்ற இலவச அழைப்பு எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-_23452365 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். பெண் குழந்தை என்றால் 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
♦ குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்தில் ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044_28551155 என்ற தமிழ்நாடு மகளிர் ஆணையம் எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்றுக் கொள்வதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வையும் காண முடியும்.
♦ மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களையோ ஆதரவற்ற பெண்களையோ கொண்டுபோய் பாதுகாப்பாய் வைக்க வேண்டுமென்றால் 044_26530504, 044_26530599 இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்ணாகும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இது செயல்படுகிறது.
♦ வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள், “உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு’’ எண்ணான 044_26184392, 91713 133424 என்ற இரு எண்களைத் தொடர்பு கொண்டு வாடகைத் தாய் என்றால் என்ன? எப்படிச் செல்ல வேண்டும்? எப்படி ஏமாறக் கூடாது என்ற விழிப்புணர்வை அடைய முடியும்.
♦ ரயிலில் செல்லும்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது ரயில் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளவோ 044_25353999 மற்றும் 9003161710, 9962500500 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
♦ சென்னை கல்லூரிகளில் மாணவர்களால் கேலி, கிண்டல் செய்து பரிகாசம் செய்யப்பட்டால் 9500099100 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி கொடுத்தால் போதும், உடனடியாக காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.
♦ பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அளவுக்கு அதிகமாய் ஏற்றிச் சென்றாலோ, அதி வேகமாய் வாகனத்தை ஓட்டிச் சென்றாலோ 044_24749002 மற்றும் 044_26744445 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
நாம் வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் எடை குறைவாக இருந்தாலோ, ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தாலோ மாநில நுகர்வோர் புகார்களுக்காகவே தொடங்கப்பட்டிருக்கும் இலவச அழைப்பு எண்: 180011440 மற்றும் 9445464748, 7299998002, 7200018001, 044_28592828 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
♦ பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது. நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது, குடித்துவிட்டோ, அலைபேசி பேசிக்கொண்டோ ஓட்டுநர் வாகனத்தை இயக்குவது போன்ற புகார்களுக்கு 9383337639 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மற்றும் புகார் அளிக்கலாம்.
நீங்கள் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவலர் மீதே புகார் கொடுக்க 044_25615086 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம்.
- இந்துமதி, சென்னை
- உண்மை இதழ், 1-15.11.17