சுயமரியாதை இயக்கத்தில் முதன்முதல் தைரியமாக விவாகரத்து
புதுவை முரசு ஆசிரியர் தோழர் பொன்னம்பலனார் அவர்கட்கும், திருமதி சுலோசனா அவர்கட்கும்
24.5.1931ல் ஏற்பட்ட விவாக ஒப்பந்தமானது இருவருடைய அபிப்பிராயப்படிக்கும் 8.4.1932இல் ரத்து செய்யப்பட்ட செய்தியை அறிந்தேன்.
கல்யாணம் என்பது தெய்வீகத் தன்மை பொருந்தியது என்று நம்பியிருப்பவர்களுக்கு மேற்கண்ட நமது தோழர்கள் இருவரும் அவ்விதம் அல்லவென்று நிரூபித்ததோடு மனதுக்கொவ்வாதபடியால் இருவரும் நிரந்தரமாய்ப் பிரிந்து விடுவதற்குச் சம்மதித்ததற்காக இருவரையும் நாம் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
சுயமரியாதை இயக்கத்தில் முதன்முதல் தைரியமாக விவாகரத்து (Divoree) செய்த இருவரையும் நாம் பாராட்டுவதோடு இனியாவது இவர்களைப் போல் பிறரும் ஏமாந்து திடீரென்று மணம் செய்து கொள் ளாமல் நீண்டநாள் அந்நியோந்நியமாகப் பழகிய பின்பே மணஞ்செய்து கொள்ள வேண்டுமென்பதோடு சேர்ந்து வாழ இஷ்டமில்லாத ஜோடிகள் ஆயுள்
முழுதும் துன்பக்கடலில் அழுந்தியிருப்பதைவிட தைரியமாக விவாகரத்துச் செய்து கொள்ள வேண்டுமென்பதையும் வற்புறுத்தி இவ்விஷ யத்தில் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டியாக இருந்த சுலோசனா பொன்னம்பலனார் ஆகிய இருவரையும் மறுமுறையும் பாராட்டுகிறேன்.
(குடிஅரசு 24.4.1932 பக்கம் 7)
(குடிஅரசு 24.4.1932 பக்கம் 7)
விடுதலை ஞாயிறு மலர்,14.3.15பக்கம்-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக