இதுதான்
பாரதம்
குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 3,400 கோடி டாலர் கொள்ளை
டில்லி, அக்.18- குழந்தைகள் உரிமைக்காக செயல்பட்டுவருபவரான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலகப் பயணம் (The Global March Against Child Labour) என்கிற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு புள்ளிவிவரம் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.
குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 3,400 கோடி டாலர் கொள்ளை
டில்லி, அக்.18- குழந்தைகள் உரிமைக்காக செயல்பட்டுவருபவரான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலகப் பயணம் (The Global March Against Child Labour) என்கிற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு புள்ளிவிவரம் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.
நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து
சிறுமிகள் இந்தியா வுக்குள் கொண்டுவரப்படுகின்றனர். பின்னர் பாலியல் தொழிலில் கட்டாய மாகத்
தள்ளப்படுகின்றனர். இது தணிவதற்கான அறிகுறியே தென்பட வில்லை. பாலியல் தொழிலில் 30 இலட்சம் பெண்கள் ஈடுபடுத்தப்பட்
டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறு கின்றன.
எச்சரிக்கை
மணியாக ஒலிக்கும் இப்புள்ளிவிவரம் குழந்தைகள் உரி மைக்காக நோபல் பரிசு பெற்றுள்ள
கைலாஷ் சத்யார்த்திமூலம் எடுக்கப் பட்ட ஆய்வில் வெளிவந்துள்ள தகவலாகும். பாலியல்
தொழிலில் தள்ளப்படுபவர்களின் பின்னணியில் உள்ள பொருளாதாரம் என்கிற தலைப்பில் ஆய்வு
மேற்கொண்டு இப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.
சட்ட
விரோத வியாபாரம்
பெண்கள்
மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களுடன், இதற்கிடையே சிவப்பு விளக்கு பகுதிகளில்
பணி யாற்றும் பெண்கள் குறித்து வெளி யான எண்ணிக்கையின்படி 60 லிருந்து 90 ,லட்சம் வரை பெண்கள் சட்டவிரோத வணிகமாக
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுளளனர். மது அருந்தும் இடங்களில், நடன மாடுமிடங்கள், மசாஜ் பார்லர்கள் ஆகியவையும் இதனுளடங்கி
உள்ளன.
அதிர்ச்சி
அளிக்கக்கூடிய புள்ளி விவரங்களாக, வயதான பெண்களைக் காட்டிலும், குறைந்த வயதுள்ள பெண் கள் அதிக விலைக்கு
விற்கப்படுகிறார் கள். வயதானவர்களுடன் ஒப்பிடும் போது, வயது குறைந்த பெண்கள் நீண்ட காலத்துக்கு
பாலியல் தொழி லில் பணியாற்ற முடியும் என்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறார்கள்.
இந்தியாவில்
மட்டும் பாலியல் தொழிலில் பணப்பரிமாற்றம் 34,300 கோடி டாலரைத் தாண்டுகிறதாம்.
சத்யார்த்தி தன்னுடைய ஆய்வுத் தகவலாக கூறும்போது, ஏராளமான முகவர்கள் பாலியல் தொழிலுக்கான முகவர்கள், பாலியல் விடுதி உரிமை யாளர்கள், வட்டிக்கடைக்காரர்கள், சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள், நீதித்துறையினர் மற்றும் சில கட்டங்களில் வணிகத் துக்காக பாலியல் தொழிலில் கட் டாயமாக ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப் பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இத்தொழிலின்வாயிலாக பணத்தைப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
சத்யார்த்தி தன்னுடைய ஆய்வுத் தகவலாக கூறும்போது, ஏராளமான முகவர்கள் பாலியல் தொழிலுக்கான முகவர்கள், பாலியல் விடுதி உரிமை யாளர்கள், வட்டிக்கடைக்காரர்கள், சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள், நீதித்துறையினர் மற்றும் சில கட்டங்களில் வணிகத் துக்காக பாலியல் தொழிலில் கட் டாயமாக ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப் பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இத்தொழிலின்வாயிலாக பணத்தைப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
2,400 கோடி டாலர் சுரண்டல்
ஆய்வுத்தகவல்களின்படி, சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள்
(காவல்துறையினர் மற்றும் பலர்) 2,400 கோடி டாலர் அளவில் குழந்தை களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்
துவதன்மூலம் சுரண்டலில் ஈடுபட் டுள்ளனர்.
அதேபோல், இந்தியாவில் வழக் குரைஞர்கள் மற்றும
நீதித்துறையினர் 5,150 கோடி
டாலர் அளவில் இலாபம் பெற்றுள்ளனர்.
குழந்தைகளைப்
பாலியல் தொழி லில் ஈடுபடுத்தி சுரண்டுவதன்மூலம் ஒட்டுமொத்தமாக 30,900 கோடி டாலர் மதிப்பில் பாலியல் தொழில்
நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன் சாத்தியமான ஆதாயமாக 3,400 கோடி டாலர் இருந்துவந்துள்ளது.
இந்தியாவில்
கூலிவேலைக்கு பணியமர்த்தும் முகவர்களால் வீட்டு வேலைகளில் குழந்தைகள் சுமார் 36 இலட்சம் அளவில் ஈடுபடுத்தப்படு
கிறார்கள் என்று ஆய்வுத்தகவல் கூறு கிறது. டில்லியில் மட்டும் 3 ஆயிரம் அலுவலகங்கள் குழந்தைகளைப்
பணியமர்த்தும் முகவர்களுக்கான அலுவலகங்களாக உள்ளனவாம்.
ஆய்வு
அறிக்கையில், குழந்தைத்
தொழிலாளர்கள் வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்த தலைநகரத்தில் உள்ள சந்தைகளில் பலகாலமாக
இருந்து வரும் அளவைவிட இரண்டரை மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இதில் சட்ட விரோத
பணப்பரி மாற் றம் 3,500 கோடி டாலரிலிருந்து 36,100 கோடி டாலர் அளவுவரையிலும் உள் ளது என்று
ஆய்வறிக்கை கூறு கிறது.
சவுக்கடி
அறியாமையில்
உள்ள இந்தியா நோபல் பரிசு பெற்றவரால் விழிப்புக்கு கொண்டு வரப்படுகிறது. வளரும்
நாடுகளில் வீட்டு வேலை களில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பாலியல் சுரண்டல்
ஆகிய வற்றின்மீது கவலை அளிப்பதாகும்.
கைலாஷ்
சத்யார்த்தி கூறும்போது, பீகாரிலிருந்தும், அசாமிலிருந்தும் இந்த குழந்தைகள், அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்
என்கிற போர்வையில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள்.
அவர்களில்
அதிகமாக இளம் பெண்கள் உள்ளனர். அவர்கள் பணிபுரியும் இடங்களில், முதலாளி களால் ஏராளமானவகைகளில்
சுரண்டப்படுகிறார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் 40
விழுக்காட்டளவில் பாலியல்
தொழிலில் தள்ளப்படுகிறார்கள் என்று கூறினார். மத்திய அரசு மனித விரோத நடவடிக்கைகள், மற்றும் சட்ட விரோத தொழில் ஆகிய வற்றைக்
குறைப்பதற்கான நட வடிக்கை எடுத்துவருவதாக கூறுகிறது.
உள்துறை அலுவலக
அலுவலர் கூறும்போது, பாலியல்
தொழிலால் பாதிக்கப்படுவோருக்கு பொருளாதார இழப்பீடு வழங்கப்படுகிறது. பல மாநி
லங்களில் பாதிப்புக்குள்ளானவர் களுக்கு (ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 இலட்சம்வரையிலும்) இழப்பீடு தரும்
திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், அதுவே நிரந் தரமானதும் அல்ல.
போதுமானதும் அல்ல. அரசு சரியான புள்ளிவிவரங் களை சேகரித்து, உரிய கண்காணிப் பையும் உறுதிப்படுத்த
உள்ளது. பெண்கள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோர்குறித்து மாநில
வாரியாக அறிந்துகொள்ள வாய்ப்பாக தனியே அலுவலகங் களைத் தொடங்க உள்ளோம் என்று
கூறினார்.
விடுதலை,18.10.14,ப2