செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதிரியாத், ஆக. 2, சவுதி அரேபியா வில் உள்ள பெண்கள் வெளி நாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர், தந்தை அல் லது வேறு ஆண் உறவினர் களிடம் அனுமதி பெற வேண் டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த விதியை சவுதி அரேபிய அர சாங்கம் நீக்கியுள்ளது.

21 வயதைக் கடந்த பெண் கள் அனைவரும் விண்ணப் பம் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் கைது


இசுலாபாத், ஆக. 2- பாகிஸ்தா னின் தேரா காஜி கான் நகரில் இந்திய உளவாளி ஒருவரைக் கைது செய்துள்ளதாக அந் நாட்டின் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் தெரிவித்த னர்.

இது தொடர்பாக பாகிஸ் தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்ட தாவது:

ராஜு லக்ஷ்மண் என்ற அந்த இந்தியர் லாகூரில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் உள்ள தேரா காஜி கான் நகரில் கைது செய்யப்பட்ட தாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர், தாம் ஓர் உளவாளி என்று ஒப்புக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.

பலூசிஸ்தான் மாகாணத் தில் இருந்து தேரா காஜி கான் நகருக்குள் நுழைந்த போது அவர் கைது செய்யப் பட்டதாகவும், மேல் விசார ணைக்காக அவர் ஓரிடத் துக்கு கொண்டு செல்லப்பட் டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் உளவு பார்த் தல் என்பது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்.

ஏற்கெனவே இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியான குல்பூஷண் ஜாதவும் இதே பலூசிஸ்தான் மாகாணத்தில்தான் கைது செய்யப்பட்டார். ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன் றம், உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டு களின் கீழ் கடந்த 2017-இல் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த பன்னாட்டு நீதிமன்றம், ஜாத வுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து மறுபரி சீலனை செய்யுமாறு பாகிஸ் தானுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 2.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக