வியாழன், 16 ஆகஸ்ட், 2018

ரயில்வே காவல்துறையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு



பாட்னா, ஆக. 16- ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவு 1957ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டது. நாடுமுழுவதும் உள்ள சீருடைப்பணிப்பிரிவினரில் ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவினரே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இன்றும் 70,000 பேருக்கும்மேல் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே பாதுகாப்பு படைப்பிரி வில் 9500 முதல் 10000 வரை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்க ளில் 50 விழுக்காடு அளவு பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்று மத்திய ரயில் வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். பெண்களுக்கான பணி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் பெண்களுக்கு 50 விழுக்காடு அளிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரயில்வேத் துறையில் 13,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. கணினி முறையிலான தேர் வின் அடிப்படையில் விரைவில் பணி நியமனங்கள் நடைபெறும் என்றும், நேர்முகத் தேர்வுகள் கிடையாது என் றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 16.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக