சென்னை, மே 22- வீட்டிற்குள்ளே முடங்கி அடுப்பறையின் அனல் காற்றை சுவாசித்த பெண்கள் தற் போதுதான் இயற்கைக் காற்றையும் சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் எதிரொலி தான் தங்களது கல்விக்காகவும் வேலைக்காகவும் கடல் கடந்து செல்கின்றனர்.
அப்படி கடல் கடந்து சென்றா லும் பாதுகாப்பில் என்னவோ சில நேரங்களில் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. இப்படி பல்வேறு இடங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு பணி புரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் பணிபுரியும் பெண்களுக் கான மகளிர் விடுதி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து வேலைக்காகவும், பயிற்சிக்காகவும் சென்னைக்கு வருகை தரும் பெண்கள் இடம் கிடைக்காமல் அல்லல்படுகிறார் கள். அப்படியே கிடைத்தாலும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறி யாக உள்ளது.இந்த நிலையில்தான், பெண் கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘தோழி’ என்கிற பெண்கள் விடுதி செயல் பட்டு வருகிறது.இந்த விடுதிகளில் மாவட் டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படு கிறது. தினசரி அடிப்படையில் பெண்கள் தங்கு வதற்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது.
அமைந்துள்ள இடங்கள்
இவ்விடுதிகள் சென்னை, செங் கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடு திகள் தொடங்கப்பட்டுள்ளன.
வசதிகள்
சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏசி, லிப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோ வேவ், வாட்டர் கூலரு டன் கூடிய ஆர் ஓ வாட்டர் போன் றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது. குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவ தற்கான விடுதி வழங் கப்படுவதில்லை.
நேரம்
இரவு 10 மணிக்குள் விடுதிக்கு வந்து விட வேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றாற் போல விடுதிக்கு வரலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
தமிழ்நாடு அரசின் ‘தோழி’ விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl. என்ற இணைய தள முகவரியில் மூலம் சந்தேகங்க ளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
முழுமையான விபரங்களுக்கு
tnwwhcl.in என்ற இணைய தளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெற லாம். தமிழ்நாடு அரசின் இந்த தோழி இல்லம் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுப்பதால் இந்த இல்லங்களில் தங்கும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.