இந்தியாவில் ஜாதியின் பெயரால் இயல்பாகக் கருதப் பட்டு நடந்து வந்த பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான்வெளி யுலகத்திற்குத் தெரியவந்தது. 1872 ஆம் ஆண்டில் டில் லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைபற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். கோதுமை வயல்வெளியில் 12 வயதுப் பெண்ணை சிலர் பாலியல்வன்கொடுமைசெய்து விட்டதாகவும்அந்தப்பெண் அந்த இடத்திலேயே மரண மடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த கிராமம் உயர் ஜாதி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பயந்துகொண்டு யாரும் புகார் செய்யவில்லை. இந்த நிலையில் கிராமத்தினரே இச்செயலுக்குத்தீர்ப்புஎழுதி னர். சுமார் 8 பேர் சேர்ந்து செய்தஇச்செயலைநாங்கள் கண்டிக்கிறோம். அதேநேரத்தில் அந்தப் பெண் ஏன் தனியாகச் சென்றாள். அந்தப் பெண் ணைத் தனியாகச் செல்ல அனு மதியளித்த அவரின் அம்மாதான் இதற்கு முக்கியக் காரணம். ஆகவே, இறந்த அந்தப் பெண் ணின் அம்மா ஊருக்குப் பொதுவான கோதுமை வய லுக்கு இரண்டு வண்டி உரம் கொடுக்கவேண்டும். குற்றம் செய்தவர்கள் அனைவரும் ஊர்வயலுக்குஎந்தக்கூலியும் வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இந்தக் கொடுமை, இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லை! இன்றுவரை அந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது.
இந்தியா சுதந்திரமடைந்த பின்பும் அதற்கு முன்பும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்களும், ஆதிவாசி பெண்களுமே. இவர்கள் மீது வன்கொடுமை திணிக்கப்படும்போது யாரும் தட்டிக் கேட்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு என்ற பார்வையில் பார்த்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
- 'குங்குமம் - தோழி',
16.3.2019
இந்து மதம் அர்த்தம் உள்ளது என்று சங்கராச்சாரியார் போன்று மெல்லிய குரலில் பேசுவோர் உண்டு.
அர்த்தமுள்ளதுதான் இந்து மதம் என்று 56 அங்குலமுள்ள மார்பைப் புடைத்துக் காட்டிக் கூச்சல் போடுவோர் உண்டு.
இன்றைக்கும் மனுதர்மத் திற்கு வக்காலத்து வாங்கி எழுதும் துக்ளக்'குகளும் உண்டு.
ஆனால், அந்த இந்து மதத்தில் ஜாதியும், பெண்ணடி மைத் தன்மையும் இரட்டைக் குழந்தைகள்தான் என்பதற்கு மேலே கண்ட எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 22.3.19