திங்கள், 8 ஜூன், 2015

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நூறு பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்

போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு

நியூயார்க், மே 27-_ போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த நூறு பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் இடம் பெற்று உள்ளனர்.
ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 12-ஆவது ஆண்டு பட்டியலில் முதல் இடத்தில் ஜெர் மனியின் அதிபர் அங்கோலா மேர்க்கெலும், அமெ ரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள ஹிலாரி கிளிண்டன் இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில் மெலிண்டா கேட்சும் உள்ளனர்.
இதில் இந்தியாவை சேர்ந்த எஸ்.பி.அய். தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச் சார்யா(30), அய்.சி.அய்.சி.அய். வங்கியின் தலைவர் சந்தா கோச்சார்(35), பயேகான் நிறுவனர் கிரண் மாஷுந்தார் ஷா(80) மற்றும் எச்.டி. மீடியா தலைவர் ஷோபனா(93) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த பெப்சிகே தலைமை அதிகாரி இந்திரா நூயி மற்றும் சிஸ்கே தலைமை தொழில்நுட்ப அதிகாரி பத்மசிறீ வாரியர் ஆகிய இரண்டு பெண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

-விடுதலை,27,5,15பக்-6